கொரோனா தடுப்பூசிக்கு பதில் வாய்வழி மருந்து - நம்பிக்கையூட்டும் புதிய தகவல்

உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இதுவரை 14 கோடிக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.
பைசர் தடுப்பூசி - கோப்புப்படம்
பைசர் தடுப்பூசி - கோப்புப்படம்
Published on

கொரோனா தொற்று நோயை தடுக்க ஊசிக்குப் பதிலாக, வாய்வழியாக உட்கொள்ளும் மருந்துகள் விரைவில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை சிறந்த பலன் தரும் என்று நம்பிக்கையூட்டுகிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இதுவரை 14 கோடிக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்தியாவில் நோய் பரவல் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பீதி அடைந்த நிலையில் தற்போது அதன் உற்பத்தி மற்றும் வினியோக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதைப்போல தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி உயிர்ப்பலியை குறைக்கிறது என்பதால் உலகம் முழுவதும் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கொரோனாவில் இருந்து முற்றிலும் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்று இருந்த நிலையில் தற்போது ஒரு மாற்றாக வாய்வழி மருந்து கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையூட்டும் தகவல்கள் வந்துள்ளன.

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர் நிறுவனம்தான் அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் இயக்குனர் ஆல்பர்ட் போர்லா அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதி உள்ளிட்ட எல்லா விஷயங்களும் சரியாக நடந்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாய் வழியாக உட்கொள்ளும் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தால் இந்த மருந்தை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com