பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்
அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் ஜே.கே.என்கிற ஜெயக்குமார். இவர் தேர்தலையொட்டி 15 நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் அவர் சற்று சோர்வாக காணப்பட்டார். உடனே அவர், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, ஜெயக்குமார், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வங்கி மூடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com