பள்ளிப்பட்டு அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

பள்ளிப்பட்டு அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on: 

பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஈச்சம்பாடி என்ற இடத்தில் பயணியர் நிழற்குடை உள்ளது. இங்கு நேற்று காலை முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவருக்கு 82 வயது இருக்கும். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X