நிகோலஸ் பூரன் அதிரடி வீணானது - 7 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது பாகிஸ்தான்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் வீரர் மொகமது ஹபீஸ் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் எடுத்து, ஒரு விக்கெட் வீழ்த்தி வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
அரை சதமடித்த பாபர் அசாம்
அரை சதமடித்த பாபர் அசாம்
Published on

கயானா:

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிளெட்சர் டக் அவுட்டானார்.  எவின் லெவிஸ் 33 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.

கிறிஸ் கெயில் 16 ரன்னும், ஹெட்மயர் 17 ரன்னும், பொல்லார்டு 13 ரன்னும் எடுத்தனர். நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயன்றார். அவர் 33 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது சிறப்பாக பந்து வீசிய

மொகமது ஹபீசுக்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com