முதல் டி20 போட்டியில் ஹசன் அலி அபாரம் - வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானின் ஹைதர் அலி, ஷோயப் மாலிக் ஆகியோர் டக் அவுட்டாகினர்.
அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஷபாப் கான், முகமது நவாஸ் ஜோடி
அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஷபாப் கான், முகமது நவாஸ் ஜோடி
Published on

டாக்கா:

பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. ஹோசைன் 36 ரன்னும், மெஹிதி ஹசன் 30 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 3 விக்கெட்டும், முகமது வசீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேசம் அணியினரின் சிறப்பாக பந்து வீசினர். இதனால் பாகிஸ்தான் 96 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.  பகர் சமான், குல்தீஷ் ஷா தலா 34 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷபாப் கான் 21 ரன்னும், முகமது நவாஸ் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது ஹசன் அலிக்கு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com