635 ரன்களுடன் ருதுராஜ் கெயிக்வாட் ஆரஞ்சு தொப்பி - 32 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷல் படேலுக்கு பர்பிள் தொப்பி

ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 635 ரன்கள் குவித்த ருதுராஜ் கெயிக்வாட் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
ருதுராஜ் கெயிக்வாட்
ருதுராஜ் கெயிக்வாட்
Published on

துபாய்:

ஐபிஎல் 14-வது சீசனில் தொடர்ந்து நடைபெற்ற 60 ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. 

இந்த லீக் ஆட்டங்களில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராக் கெயிக்வாட் 16 போட்டிகளில் ஒரு சதம், 4 அரைசதங்களுடன் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

15 போட்டிகளில் 32 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்ஷல் படேல் பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

மேலும் விருது பெற்றவர்கள்:

வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) - ருதுராஜ் கெயிக்வாட் (சிஎஸ்கே)

ஃபேர் பிளே விருது - ராஜஸ்தான் ராயல்ஸ் 

சிறந்த கேட்ச் விருது - ரவி பிஷ்னோய்  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com