

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கதேவரின் உருவபடத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கடந்த 24-ந்தேதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் உருவச்சிலைக்கு அணிவிக்க தங்கத்தினால் ஆன உலோகத்தினை வங்கியில் இருந்து எடுத்து ஓ.பன்னீர்செல்வம் வழங்கியிருந்தார். தேவர் ஜெயந்தி விழாவில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் 1-ந்தேதி அவரது மனைவி விஜயலட்சுமி இறந்ததால் 60 நாட்கள் கழித்துதான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்பதால் குருபூஜையில் பங்கேற்றவில்லை என தெரிவிக்கப்பட்டது.
நாளை மறுதினம் 1-ந்தேதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஓ.பன்னீர்செல்வம் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்... இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 14,313 பேருக்கு தொற்று