ஒரு வாரமாக 180 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

கடந்த 21 நாட்களாக 54 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை
கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4,01,078 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தினசரி பாதிப்பு, 3வது நாளாக தொடர்ந்து 4 லட்சத்தை தாண்டி பதிவாகி உள்ளது. எனினும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:-

நாடு முழுவதும் கடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. கடந்த 14 நாட்களாக 18 மாவட்டங்களிலும், கடந்த 21 நாட்களாக 54 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com