பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

பெரம்பலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் ஏற்கனவே 4,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே 48 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 4,557 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவிற்கு தற்போது 28 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 347 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலும் நேற்று யாரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே மாவட்டத்தில் 2,258 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,234 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 3 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 322 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com