பெரம்பலூரில் கொரோனாவால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை

பெரம்பலூரில் கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. அரியலூரில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
Published on

பெரம்பலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தலா ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக் கும் என மொத்தம் 5 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,527 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளார்.

பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 4,375 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 495 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,231 ஆக உள்ளது. தமிழகத்திலேயே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்த எண்ணிக்கையை கொண்ட மாவட்டமாக பெரம்பலூர் திகழ்கிறது. மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,206 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 4 பேர் மட்டுமே வெளிமாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு யாரும் சிகிச்சையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 449 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com