மும்பை பந்த்ராவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்தது

மும்பை பந்த்ராவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 13 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இடிந்து விழுந்த மேம்பாலம்
இடிந்து விழுந்த மேம்பாலம்
Published on

மும்பை:

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் என்ற பகுதியில் பிகேசி பிரதான சாலை மற்றும் சாந்த குரூஸ்-செம்பூர் இணைப்பு சாலைக்கு இடையே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

பாதி மேம்பாலம் கட்டிய நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் 13 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் உயிரிழப்பு எதுவும் இல்லை எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com