மோகனூர் அருகே வாலிபர் தற்கொலை

மோகனூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

மோகனூர்:

மோகனூர் போலீஸ் நிலைய பகுதியில் உள்ள மாடகாசம்பட்டி ஊராட்சி எம்.ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் வடிவேல் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வடிவேலை, ஏன் வேலைக்கு செல்லாமல் இப்படி ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறாய்? ஒழுங்காக ஏதாவது ஒரு வேலைக்கு போ என அவரது தந்தை அண்ணாமலை கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த வடிவேல், நேற்று தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரையை எடுத்து சாப்பிட்டு விட்டு மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், வடிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com