திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே போட்டியிடும்- அமைச்சர் பேச்சு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே போட்டியிடும் என்று அமைச்சர் கேசி வீரமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கேசி வீரமணி
அமைச்சர் கேசி வீரமணி
Published on

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

அ.தி.மு.க.வினர் சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். வாக்காளர் பட்டியலில் இடம்பெறமால் உள்ளவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க அனைவரும் முழு முயற்சி எடுக்க வேண்டும்.

எதிர்கட்சியான தி.மு.க.வினர் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். அவர்களின் பணிகளை மிஞ்சும் வகையில் ஒவ்வொரு அ.திமு.க. தொண்டரும் பாடுபட வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து கூறி பணியாற்ற வேண்டும்.

கிராமபுறங்களில் அதிகளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே போட்டியிடும்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கான அனைத்து பணிகளையும் நான் செய்து வருகின்றேன். தகவல் தொழில்நுட்ப பிரிவினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com