அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா

அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து திருச்சியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான வளர்மதி திருச்சி உறையூரில் உள்ள வீட்டில் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com