தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியது அதிமுக அரசு- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியது அதிமுக அரசு தான் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயகுமார்
அமைச்சர் உதயகுமார்
Published on

திருமங்கலம்:

திருமங்கலம் தொகுதியில் 4-வது நாளாக வலையபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.வினர் கடந்த காலத்தில் அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு வராது. 2 ஏக்கர் நிலம் தருகிறேன் என்று கூறி வாக்குகளை பெற்றார்கள். ஆனால் யாருக்கும் ஒரு படி இடம் கூட கொடுத்ததாக வரலாறு இல்லை.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஏமாற்றுகிற அறிக்கையாகத்தான் இருக்கும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட நகைக்கடன், விவசாய கடன் தள்ளுபடி எனக் கூறினார்கள். கடைசியில் மக்களைத்தான் தள்ளுபடி செய்தார்கள். எந்தக் கடனும் தள்ளுபடி ஆகவில்லை. அவர்கள் சொல்வது எதையும் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிய அரசு அம்மாவின் அரசு ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அய்யப்பன், தமிழழகன், சரவண பாண்டி, அன்பழகன், லதா ஜெகன், ஆண்டிச்சாமி, சுகுமார், சுமதி சாமிநாதன், கோடீஸ் வரன், வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com