மேகாலயா முதல்மந்திரிக்கு கொரோனா தொற்று

மேகாலயா முதல்மந்திரி கான்ரட் சங்மாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேகாலயா முதல்மந்திரி கான்ரட் சங்மா
மேகாலயா முதல்மந்திரி கான்ரட் சங்மா
Published on

ஷில்லாங்:

இந்தியாவில் தினமும் சராசரியாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிவருகிறது. வைரஸ் பரவலால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

இதற்கிடையில், கொரோனா பாதிப்பிற்கு பல்வேறு மாநிலங்களில் முதல்மந்திரிகள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என அரசியல்வாதிகளும் இலக்காகி வருகின்றனர்.

அந்த வரிசையில் மேகாலயா முதல்மந்திரியும் இடம் பெற்றுள்ளார். மேகாலயா மாநில முதல்மந்திரியாக செயல்பட்டு வருபவர் கான்ரட் சங்மா. இவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறிகள் சிறிதாக இந்ததையடுத்து கான்ரட் சங்மா வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்மந்திரி கான்ரட் சங்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் உள்ளதால் நான் எனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். 

கடந்த 5 நாட்களாக என்னை சந்தித்த நபர்கள் மற்றும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனையை செய்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com