முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது

முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு 2 நாட்கள் நடக்கிறது. தரவரிசை மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேவையான கல்லூரிகளை தேர்வு செய்வார்கள்.
பல் மருத்துவம்
பல் மருத்துவம்
Published on

சென்னை:

தமிழகத்தில் முதுநிலை பல் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

தமிழகத்தில் முதுநிலை பல் மருத்துவ மேற்படிப்புக்கு மொத்த இடங்கள் 358 ஆகும்.

இதில் அரசு கல்லூரிகளுக்கான இடங்கள் 62 . சுயநதி கல்லூரிகளுக்கான இடங்கள் 296.

நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்புக்கு 1018 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 964 விண்ணப்பங்கள் தரவரிசைக்கு தகுதியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இவர்களுக்கான கலந்தாய்வுக்கான பதிவு ஆன்லைனில் இன்று தொடங்கியது. நாளை முதல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்குகிறது. 2 நாட்கள் கலந்தாய்வு நடக்கிறது. தரவரிசை மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேவையான கல்லூரிகளை தேர்வு செய்வார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com