விதி மீறிய வாகனங்களுக்கு அபராதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு தலைகவசம் அணியாமல் செல்போன் பேசிய குற்றத்திற்காக 16 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் 4 சக்கர வாகனத்தில் வந்த 9 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்
அபராதம்
Published on

மதுரை:

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள் மீதான சிறப்பு தணிக்கை நடைபெற்றது. இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் செல்போனில் பேசியபடி வந்தவர்கள் மற்றும் இலகுரக வாகனங்களில் சீட்பெல்ட் அணியாமல் வந்த ஓட்டுனர்கள் மீது சிறப்பு வாகன ஆய்வு செய்யப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தலைகவசம் அணியாமல் செல்போன் பேசிய குற்றத்திற்காக 16 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் 4 சக்கர வாகனத்தில் வந்த 9 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகனத்தகுதி சான்று இல்லாத சரக்கு வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.. இந்த ஆய்வில் ரூ.45 ஆயிரம் அபராத கட்டணமாக அரசிற்கு வருவாய் ஈட்டப்பட்டது. இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபு மற்றும் அனிதா கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com