கீரனூர் அருகே நர்சிங் மாணவி தற்கொலை

கீரனூர் அருகே நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கீரனூர்:

கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் கோமதி (வயது 18). இவர், புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார். வீட்டில் கோமதி எந்த வேலையும் செய்யாமல் செல்போன் பார்த்துக்கொண்டிருந்தாள். இதைப்பார்த்த அவளுடைய தாயார் மாரிக்கண்ணு, கோமதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோமதி எலி பேஸ்ட் (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com