கீரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தொழிலாளி பலி

கீரமங்கலம் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

கீரமங்கலம்:

கீரமங்கலம் காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 57) . இவர் அறந்தாங்கியில் உள்ள ஒரு துணிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கீரமங்கலம் மேற்கு மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே பனங்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ராகுல் (25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மாதவன், ராகுல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாதவன் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். ராகுல் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com