காஷ்மீரில் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டிய பயங்கரவாதிகள் 5 பேர் கைது

காஷ்மீரில் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டிய பயங்கரவாதிகள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கட்டுப்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் காஷ்மீரின் புல்வா மாவட்டம் சீர் மற்றும் படா கண்ட் கிராமங்களில் சிலர் பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மடிக்கணினியும், பிரிண்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com