பத்திரிகை, விளையாட்டு துறையில் இமாலய சாதனை- பா.சிவந்தி ஆதித்தனாருக்கு கனிமொழி எம்.பி. புகழாரம்

தினத்தந்தி நாளிதழை ஏராளமான வாசகர்கள் படிக்கும் வண்ணம் சாதனை படைத்தவர். அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை
டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை
Published on

திருச்செந்தூர்:

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் அன்பிற்கும், மரியாதைக்கும் உரியவர். கலைஞரின் நீண்ட கால நண்பர். அவர் மீது அன்பும், பாசமும் கொண்டவர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து அவரது திறமையை எப்போதும் போற்றுபவர். அவரது இழப்பு அவரது சமுதாயத்திற்கு மட்டுமின்றி, அனைவருக்கும் பேரிழப்பாகும்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பத்திரிகை, விளையாட்டு துறையில் இமாலய சாதனைகளை படைத்துள்ளார். தினத்தந்தி நாளிதழை ஏராளமான வாசகர்கள் படிக்கும் வண்ணம் சாதனை படைத்தவர். அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. எப்படி வெற்றி பெற்றதோ அதைவிட பெருவாரியான வெற்றியை ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெறும். தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெறுவதால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com