கடத்தூர், பொம்மிடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

கடத்தூர், பொம்மிடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம்
Published on

கடத்தூர்:

கடத்தூர் மின் கோட்டத்திற்குட்பட்ட கடத்தூர், ராமியனஅள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, பொம்மிடி, முத்தம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் ராமியனஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், ஆர்.கோபிநாதம்பட்டி, நவலை, கர்த்தான்குளம், கடத்தூர், சுங்கரஅள்ளி, சில்லாரஅள்ளி, புதுரெட்டியூர், ஒடசல்பட்டி, மணியம்பாடி, பி.பள்ளிப்பட்டி, பொம்மிடி, மல்லாபுரம், கொண்டகாரஅள்ளி, வத்தல்மலை, முத்தம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com