ஜோலார்பேட்டை அருகே வாலிபர் தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே திருமணத்தில் விருப்பம் இல்லாததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த மேல்அச்சமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. அவரது மகன் அன்பழகன் (வயது 27). இவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என கூறப்படுகிறது. உயிரோடு இருந்தால் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என நினைத்து வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அன்பழகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தீக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com