நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - அதிபர் ஜோ பைடன் டுவிட்

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுக் கொண்ட ஜோ பைடன், நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜோ பைடன்
அதிபர் ஜோ பைடன்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழா அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுக் கொண்ட ஜோ பைடன், நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நெருக்கடியை சந்திக்கும் இந்த தருணத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 

எனவே, அதிபர் அலுவலகமான ஓவல் அலுவலகம் செல்கிறேன். அமெரிக்க மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com