அமெரிக்காவில் தமிழ் பெண் எம்.பி.க்கு முக்கிய பதவி

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜெயபால் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
பிரமிளா ஜெயபால்
பிரமிளா ஜெயபால்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜெயபால் (வயது 55). ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் சென்னையில் பிறந்த தமிழ் பெண் ஆவார். 2017-ம் ஆண்டு முதல் இவர் அமெரிக்க எம்.பி.யாக உள்ளார்.

இவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில், நம்பிக்கை தடுப்பு, வணிக மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரமிளா ஜெயபால், இது தனக்கு கிடைத்துள்ள கவுரவம் என குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com