ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட்- இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய அணியுடன் நாளை முதல் டெஸ்ட்டில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி
விராட் கோலி
Published on

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடன் நாளை முதல் டெஸ்ட்டில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலி தலைமையில் ஆன மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, அஸ்வின் , ஊமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  

ரீஷப் பந்துக்கு பதிலாக விருதிமான் சாஹா விக்கெட் கீப்பராக விளையாட உள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட சுப்மன் கில், கேஎல்ராகுல் ஆகியோர் அணியில் இடம்பெற வில்லை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com