உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதல் - இந்தியா வெற்றிபெற சிறப்பு யாகம் நடத்திய ரசிகர்கள்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
யாகம் நடத்திய ரசிகர்கள்
யாகம் நடத்திய ரசிகர்கள்
Published on

பெங்களூரு:

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சூப்பர் 12 சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டி20 உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நேற்று சிறப்பு யாகம் நடத்தினர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com