கொரோனா இரண்டாவது அலையில் 500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உயிரிழப்பு

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலையில் 513 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வார்டில் மருத்துவ பணியாளர்கள்
கொரோனா வார்டில் மருத்துவ பணியாளர்கள்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன் நின்று பணியாற்றும் டாக்டர்களும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை 513 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக டெல்லியில் 103 மருத்துவர்கள், பீகாரில் 96 மருத்துவர்கள், உத்தர பிரதேசத்தில் 41 மருத்துவர்கள், அசாமில் 6 மருத்துவர்கள், தமிழ்நாட்டில் 18 மருத்துவர்கள், கேரளாவில் 4 மருத்துவர்கள், மகாராஷ்டிராவில் 15 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com