கோவை, நீலகிரியில் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

கோவையில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் கோவை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மாலையில் காந்திபுரம், ரெயில் நிலையம், உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், சரவணம்பட்டி, கணபதி, செல்வபுரம், ஆத்துப்பாலம், போத்தனூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இரவிலும் தொடர்ந்து மழை நீடித்தது.

தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள மேற்கு மலை தொடர் ச்சி அடிவார கிராமங்களான சின்னத் தடாகம், வரப்பாளையம், கவுண்ட ம்பாளையம், பூச்சியூர், கோவனூர் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக ஆங்காங்கே உள்ள குளங்கள், தடுப்பணைகளில் மழைநீர் நிரம்பியது.

மேலும் தொடர் மழையால் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டுமான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

நேற்று காலை ஊட்டி, காந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழையால் சேரிங்கிராஸ் சாலை, தாவரவியல் பூங்கா செல்லும் சாலை, ரோஜா பூங்கா செல்லும் சாலை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியும் நின்றதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர். கோத்தகிரியில் அரவேனு, ஜான்ஸ கொயா, டானிங்டன் குன்னூர் பகுதிகளில் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.

கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

அன்னூர்-12, மேட்டுப்பாளையம்-34, வால்பாறை பி.ஏ.பி -24, வால்பாறை தாலுகா-22, ஆழியார்-42, சூலூர்-14, பொள்ளாச்சி-41, கோவை தெற்கு-18 விமான நிலையம்-18.9, பெரியநாயக்கன்பாளையம்-28.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com