தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடியுடன் பெய்த மழையால் சாலைகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி நின்றது.
மழை
மழை
Published on: 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 25-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்துள்ளது. ஆனாலும் தென் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

சென்னையில் நள்ளிரவில் இடியுடன் பலத்த மழை ஒரு சில பகுதிகளில் பெய்தது. இன்று நகரின் ஒருசில பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்று அவர் கூறினார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடியுடன் பெய்த மழையால் சாலைகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி நின்றது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக வடிந்துவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com