கொரோனா சிகிச்சை மையம் தொடங்கி ஓராண்டு நிறைவு - நோயாளிகளுடன் ஆட்டம் போட்ட மருத்துவ ஊழியர்கள்

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கணிசமாக குறைந்து வருகிறது.
ஆடி மகிழும் மருத்துவ ஊழியர்கள்
ஆடி மகிழும் மருத்துவ ஊழியர்கள்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா-பரவல் அதிக அளவில் இருந்தபோது பல்வேறு பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டன. இந்த சிகிச்சை மையங்கள் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, தற்போது அங்கு கொரோனா-பரவல் வெகுவாக குறைந்துள்ளது. மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 974 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் உள்ள ஹோரிஹன் நகரில் நிஸ்கோ கொரோனா சிகிச்சை-மையம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. 

அந்த சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அந்த சிகிச்சை-மையம் தொடங்கப்பட்டு ஓராண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் கடந்த 2-ம் தேதி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு கவச உடைந்த அணிந்த மருத்துவ ஊழியர்கள் கொரோனா நோயாளிகளுடன் இணைந்து பாட்டு மற்றும் நடனமாடி ஆட்டம் போட்டனர். 

இந்நிகழ்ச்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனரீதியில் புத்துணர்வை அளிக்கும் வகையில் உள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com