பார்முலா1 கார்பந்தயம் : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதல் சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நடந்தது.
கோப்பையுடன் ஹாமில்டன்
கோப்பையுடன் ஹாமில்டன்
Published on

சகிர்:

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதல் சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 308.238 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

எதிர்பார்த்தது போலவே நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 03.897 வினாடிகளில் வெற்றி பெற்று, அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். அவரை விட 0.745 வினாடி மட்டுமே பின்தங்கிய நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகள் பெற்றார். 2-வது சுற்று போட்டி வருகிற 18-ந்தேதி இத்தாலியில் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com