குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா

கட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பாஜகவின் கொள்கையின்படி பதவி விலகியதாக விஜய் ரூபானி கூறினார்
விஜய் ரூபானி
விஜய் ரூபானி
Published on

அகமதாபாத்:

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், கட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பாஜகவின் கொள்கையின்படி பதவி விலகியதாக கூறினார். 

குஜராத் முதலமைச்சராக பணியாற்ற வாய்ப்பு தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய அவர், கட்சியில் இனி தனக்கு எந்தப் பொறுப்பை வழங்கினாலும், அதைச் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com