தாய் கண்டித்ததால் விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை

பெருந்துறை அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பெருந்துறை:

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் வெங்கமேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். அவருடைய மனைவி மணிமேகலை. கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு பார்வதி (வயது 25) என்கிற மகள் இருந்தார். இவர் பி.ஏ.படித்துவிட்டு் வீட்டில் இருந்து வந்தார்.

மேலும் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு பார்வதி வீட்டு வேலைகளை சரியாக செய்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனை மணிமேகலை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால் பார்வதி மனமுடைந்து காணப்பட்டு வந்தார்.

கடந்த 12-ந்தேதி இரவு வீட்டில் விஷத்தை குடித்தார். பின்னர் இதுபற்றி தனது தாயிடம் கூறினார். உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பார்வதி நேற்று மாலை இறந்தார்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com