மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டு நீடிப்பு

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு மத்திய அரசு ஏற்கனவே 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
ஜாகீர் நாயக்
ஜாகீர் நாயக்
Published on

மும்பை: 

மும்பையை சேர்ந்தவர் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக். இவர்மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், கிளர்ச்சியை தூண்டும்படி பேசியது ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். 

அப்போது அவரது இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. மலேசியாவில் தஞ்சமடைந்து அங்கு நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு.

நேற்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com