கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மறியல் - 60 பெண்கள் உள்பட 85 பேர் கைது

நாகப்பட்டினம், பிப்.6-நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 85 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
Published on

நாகை:

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் 4-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் முன்னிலை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சித்ரா, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் 4½ லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், ஜி.பி.எப். வட்டி குறைப்பு ரத்து ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். தமிழக அரசு பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக உச்ச வரம்பின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளி்ட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உட்பட 85 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com