திருக்கோவிலூர் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

திருக்கோவிலூர் அருகே ஓடும் பஸ்மீது மர்மநபர் கல்வீசி கண்ணாடியை உடைத்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருக்கோவிலூர்:

திருவெண்ணெய்நல்லூரில் இருந்து திருக்கோவிலூருக்கு நேற்று மாலை 4 மணி அளவில் அரசு பஸ் ஒன்று திருக்கோவிலூர் தாசர்புரம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்மநபர் ஒருவர் திடீரென கல்லைஎடுத்து பஸ்மீது வீசினார். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சல் எழுப்பினர். இதையடுத்து டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.

இதுபற்றிய தகவல் அறிந்து திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறி்த்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com