மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் டைகர் உட்ஸ்

பிரபல கோல்ப் வீரரான டைகர் உட்ஸ், கடந்த மாதம் அமெரிக்காவில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி காயமடைந்தார்.
டைகர் உட்ஸ்
டைகர் உட்ஸ்
Published on: 

லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்க கோல்ப் வீரரான டைகர் உட்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மாதம் 24ம் தேதி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். 

ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் சென்றபோது திடீரென அவரது கார் புல்வெளி பகுதியில் உருண்டு கவிழ்ந்தது. காரில் தனியாக பயணித்த உட்ஸ் பலத்த காயம் அடைந்தார்.

தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு சென்று விபத்தில் சிக்கிய டைகர் உட்சை மீட்டனர்.

காலில் அதிகளவில் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டைகர் உட்ஸ் நலமுடன் வீடு திரும்பினார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் வீடு திரும்பி விட்டேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஆதரவளித்த மக்கள் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com