பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம்- சுகாஷ் யத்திராசுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் விளையாட்டுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்
Published on

சென்னை:

த.மா.க. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

டோக்கியோ பாராலிம்பிக்  ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது பெரிதும் பாராட்டுக்குரியது.

பாராலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் இந்திய விளையாட்டு வீரர்களின் பெருமை உலக அரங்கில் மென்மேலும் பரவுகிறது.

குறிப்பாக இந்த வெற்றியானது இந்திய பேட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமளிக்கிறது.

வீரரின் விளையாட்டுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com