சிறுமி பலாத்காரம்- வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அய்யாக்கண்ணு
அய்யாக்கண்ணு
Published on

கடலூர்:

விருத்தாசலம் அருகே உள்ள கோ.பவளங்குடியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் அய்யாக்கண்ணு (வயது 27) . இவர் கடந்த 25.12.2018 அன்று அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். 

இதையறிந்த சிறுமியின் தாய், இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அய்யாகண்ணுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து போலீசார், கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அய்யாக்கண்ணுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலைச்செல்வி ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com