

மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு கோலார், குஜராத், திம்பம் ஆகிய பகுதிகளில் இருந்து 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு 48 லோடு விற்பனைக்கு வந்திருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு சீசன் இல்லாததால் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து உருளைக்கிழங்கு லோடு எதுவும் வரவில்லை. ஏலத்தில் கோலார் உருளைக்கிழங்கு ரூ.500-ல் இருந்து ரூ.650-க்கும் குஜராத் உருளைக்கிழங்கு ரூ.450-ல் இருந்து ரூ.550-க்கும், திம்பம் உருளைக்கிழங்கு ரூ.500-ல் இருந்து ரூ.600 வரை விற்பனையானது.
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள வெள்ளைப்பூண்டு மண்டிகளுக்கு ஊட்டி, திம்பம் ஆகிய பகுதிகளில் இருந்து 40 கிலோ எடை கொண்ட சுமார் 13 ஆயிரம் மூட்டை வெள்ளைப் பூண்டு விற்பனைக்கு வந்திருந்தது.
ஏலத்தில் ஊட்டி வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.130-க்கும், தாளவாடி வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ. 20-ல் இருந்து ரூ.95 வரை விற்பனை ஆனது.