காங்கிரசில் இருந்து விலகிய பி.சி.சாக்கோ தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பி.சி.சாக்கோ (74). கேரளாவைச் சேர்ந்த இவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்ததுடன் எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.
சரத் பவாருடன் பிசி சாக்கோ
சரத் பவாருடன் பிசி சாக்கோ
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் பி.சி. சாக்கோ. இவர் காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை எனக் கூறி கடந்த 11-ம் தேதி விலகிய நிலையில், நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தவுடன் சாக்கோ கூறியதாவது:

இன்றைய சூழலில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை தேவை. ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியே பா.ஜ.க.வுக்கு மாற்றாக வரமுடியும். நான் முன்பிருந்த கட்சியில் அதற்கான முன்னெடுப்பை எடுப்பதாகத் தெரியவில்லை என தெரிவித்தார்.

அதன்பின் பேசிய சரத் பவார், கேரள முதல் மந்திரி என்னை அழைத்து பிசி சாக்கோ தேசியவாத காங்கிரசில் இணைவது மகிழ்ச்சி என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com