

பழனி:
அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர். இதுகுறித்து பழனி அடிவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் போலி ஆசாமி எனத் தெரிய வந்தது.
மேலும் அவர் வந்த சைரன் வைத்த வாகனமும் போலியாக தயார்படுத்தி வந்தது என தெரிய வந்தது. இதனையடுத்து அந்த காரையும், அவரிடம் இருந்த போலி அடையாள அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த ஆசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்து பின்னர் கைது செய்த போலீசார் இதே போல் வேறு யாரிடமாவது அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஜயன் என்பவர் தான் போலீஸ் அதிகாரி எனக் கூறி திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் ஆய்வு செய்து கொண்டு இருந்த போது சிக்கினார். அதே போல போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி பழனியில் கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.