நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு

முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி குறைந்துள்ளதால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
முட்டை
முட்டை
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாகவே முட்டையின் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் முட்டை விலை 4.40 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை மேலும் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். அதன்படி முட்டை கொள்முதல் விலை 4.50 காசுகளாக உயர்ந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு: சென்னை 4.75, ஐதராபாத் 4.16, விஜயவாடா 4.30, மைசூரு 4.63, மும்பை 4.60, பெங்களூரு 4.60, கொல்கத்தா 4.83, டெல்லி 4.21.

தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டையின் அளவு 50 லட்சமாக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தியும் சற்று குறைந்து உள்ளது. முட்டையின் தேவை அதிகரித்து உள்ள நிலையில் உற்பத்தி குறைந்து உள்ளதால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த 5 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com