நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்வு

நாமக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ரூபாய் வரை முட்டை விலை குறைந்த நிலையில், ரூ 3.95 ஆக இருந்த முட்டை விலை இன்று 25 காசுகள் உயர்வுடன் ரூ. 4.20ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
முட்டை
முட்டை
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையைக் கொள்முதல் செய்கின்றனர்.

இந்தியாவிலேயே முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நாமக்கல் மாவட்டம். அடுத்தது ஹைதராபாத்.அதற்கு அடுத்த நிலையில்தான் வட மாநிலங்கள் உள்ளன.

தற்போது நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வு அதிகரிப்பால் விற்பனை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

ஐதராபாத், விஜயவாடா, ஹோஸ்பெட் மண்டலங்களில் விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளதாலும், முட்டை விற்பனை அதிகரித்துள்ளதாலும், முட்டை விலையை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ரூபாய் வரை முட்டை விலை குறைந்த நிலையில், ரூ 3.95 ஆக இருந்த முட்டை விலை இன்று 25 காசுகள் உயர்வுடன் ரூ. 4.20ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

பிற மண்டலங்களில் முட்டை விலை வருமாறு:-

பெங்களூரு ரூ.4.25, சென்னை ரூ.4.40, மும்பை ரூ.4.50, விஜயவாடா ரூ.4.26.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com