இருபது ஓவர் கிரிக்கெட்டில் கேப்டனாக டோனி புதிய சாதனை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 213 போட்டிகளில் டோனி கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில்130 வெற்றி, 81 தோல்விகள் அடங்கும்.
எம்.எஸ்.டோனி
எம்.எஸ்.டோனி
Published on

துபாய்:

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த எம்.எஸ்.டோனி நேற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

நேற்று நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் எம்.எஸ்.டோனி 20 ஓவர்  கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்தியாவுக்காக கேப்டன் பொறுப்பிலிருந்து 41 வெற்றியைக் கொடுத்துள்ளார். இதில் தான் கேப்டன் பொறுப்பு வகித்த ஆரம்ப கட்டத்திலே இந்தியாவுக்கு முதல் இருபது ஓவர் உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்த (2007) பெருமையும் அடங்கும்.

இந்தப் பட்டியலில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டேரன் சமி டி20 போட்டிகளில் 208 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர்களை தொடர்ந்து இந்தியாவின் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் முறையே 170 மற்றும் 153 ஆட்டங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com