

சென்னை:
டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா பிளஸ் பரவி வருகிறது.
இந்நிலையில் டெல்டா-பிளஸ் கொரோனா கவலை தரக்கூடியது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் தமிழ் நாட்டில் டெல்டா-பிளஸ் வகை கொரோனா பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்.... இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 50,848 பேருக்கு தொற்று
இந்தியாவில் நேற்றுவரை 22 பேருக்கு டெல்டா-பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருந்தது.