தினகரன் மீது அவதூறு பேச்சு: அமைச்சர் சி.வி.சண்முகம் மீது போலீசில் புகார்

டி.டி.வி. தினகரனை அவதூறாக பேசியதாக அமைச்சர் சி.வி.சண்முகம் மீது கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் அ.ம.மு.க.வினர் மனு அளித்தனர்.
கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் அ.ம.மு.க.வினர் புகார் மனு அளித்த போது எடுத்த படம்.
கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் அ.ம.மு.க.வினர் புகார் மனு அளித்த போது எடுத்த படம்.
Published on

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஒரு புகார் மனு அளித்தனர். கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில இளம் பெண்கள் பாசறை செயலாளர் வக்கீல் செங்கொடி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை அவதூறு செய்யும் வகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசி வருகிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. 

புகார் மனு அளித்த போது அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜேந்திரபூபதி, நகர செயலாளர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com