

நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வதேவும், பிரிட்டனின் டேன் இவான்சும் மோதினார்கள்.
தொடக்கம் முதலே மெட்வதேவ் சிறப்பாக விளையாடினார். முதல் செட்டை 6-3 என மெட்வதேவ் கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-4, மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், மெட்வதேவ் 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.